Latestமலேசியா

பள்ளிக்கு வெளியே கடத்தப்பட்ட மாணவி காரிலிருந்து குதித்து தப்பினார்

ஜோகூர் பாரு, நவ 26 – Johor Jaya, Taman Molek கில் பள்ளிக்கு முன்புறம் ஆடவன் ஒருவனால் காரில் கடத்திச் செல்லப்பட்ட 13 வயது மாணவி அக்காரிலிருந்து குதித்து தப்பினார். நேற்று விடியற்காலை மணி 6.50 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின்போது காருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட இடத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் அம்மாணவி கீழே குதித்து தப்பினார். சமூக வலைத்தளத்தில் வைரலான அந்த கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பில் போலீசார் புகார் பெற்றுள்ளதோடு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வேனிலிருந்து இறங்கி நடந்து சென்ற அந்த மாணவியை
Perodua Kancil காரில் வந்த ஆடவன் ஒரு பாரத்தை கொடுத்து அதனை பள்ளியில் சமர்ப்பித்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளான். இதனை மறுக்கவே திடீரென அம்மாணவியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளதாக Sri Alam மாவட்ட போலிஸ் தலைவர் Mohd Sohaimi Ishak வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!