Latestமலேசியா

பள்ளிக்கூடங்களிலே கோவிட் தடுப்பூசிக்கான பதிவு ; விரைவில் அறிவிப்பு

கோலாலம்பூர், பிப் 8 – நேற்று வரையில் நாட்டில், சிறார்களுக்கான PICKids -தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 63,641-ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதனிடையே, சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி பதிவை, பள்ளிக்கூட நிலையில் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் செய்யப்படுமெனவும் கைரி கூறினார். மாணவர்களின் பதிவை தத்தம் பள்ளிகளே செய்யும் வேளை, பள்ளிக்கூடத்திலே அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுமென அவர் இன்று தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!