கீவ், மார்ச் 7 – மருத்துவமனை , சிறார் காப்பகம், பள்ளிக்கூடங்கள் உட்பட பொது மக்கள் இருக்கும் கட்டடங்கள் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வருவதாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, Irpin பகுதியிலிருந்து வெளியேறி கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
இவ்வேளையில், குண்டுகள் பொழிவதால் Mariupol துறைமுக நகரில் மக்களை பேரளவில் வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்நகரில் மக்கள் கடந்த 5 தினங்களாக நீர் , மின்சாரம், உணவு இன்றி தவிக்கின்றனர்.