
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்ய உதவிய , பயிற்சி ஆரியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
21 வயதான அந்த பயிற்சி ஆசிரியர், ஆசியர் பயிற்சி கழகத்தைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து, செகாமாட்டில் உள்ள பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.
சம்பவத்தின் போது அவர், Water Jet கருவியின் மூலம், நீரைப் பாய்ச்சி, மேசை நாற்காலிகளை கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து அந்த பயிற்சி ஆசிரியர் கீழே சரிந்ததாக, செகாமாட் போலிஸ் தலைவர் Ahmad Zambry Marinsah தெரிவித்தார்.