
நீலாய், மார்ச் 15 – புதிய பள்ளித் தவணை தொடங்கும்போது, பள்ளிச் சீருடையை வாங்க இயலாத பெற்றோர் தங்களது பிள்ளைகளை சாதாரண உடைகளில் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.
வறிய நிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டமான நிலையை உணர்ந்து அந்த தளர்வு வழங்கப்படுவதாக, கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார் .
அதே வேளை, சீருடை அமைப்புகளுக்கான ஏற்ற சீருடையை வாங்க முடியவில்லை என பெற்றோர்கள் மனக்குமுறலையும் முன் வைத்துள்ளனர்.
ஆகவே, பள்ளிக்கூடத்தை பிரதிபலிக்கும் டீ- சட்டையை அணிய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.