Latestமலேசியா

பள்ளியை சுற்றியுள்ள பகுதி நன்றாக இருப்பது உறுதிப்படுத்தப்படும் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஆக 11 – நாடு முழுவதிலும் பள்ளியை சுற்றியுள்ள பகுதி நன்றாக இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்துவேன் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பள்ளிகளும் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்தால்தான் மாணவர்கள் முழுமையாக பள்ளி பாடத்தில் கவனம் செலுத்த முடியும் என அன்வார் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த முகநூலில் தனது அரசியல் செயலாளர் அகமட் பர்ஹான் பவ்சி ( Ahmad Farhan Fauzi) குவந்தானில் Sultanah Hajjah Kalsom இடைநிலைப் பள்ளியை கண்காணிப்பதையும் அன்வார் பதிவிட்டிருந்தார். அண்மையில் தம்மை பிரதிநிதித்து அகமட் பர்ஹான் குவந்தான் Indera Mahkota-விலுள்ள பள்ளிக்கும் வருகை புரிந்ததாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!