
ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 28 – ஜூலை மாத இறுதியில், பள்ளிவாசலில் அரசியல் உள்ளடக்கம் கொண்ட உரையை ஆற்றியதாக இதற்கு முன் கூறப்பட்ட சம்பவம் தொடர்பில், தொடப்பு இலக்கவியல் அமைச்சர் பஹ்மி பட்சிலுல்லு எதிராக, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது.
பஹ்மி நடப்பு நிலவரம் குறித்து மட்டுமே உரையாற்றிய போது பேசியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, MAIS – சிலாங்கூர் இஸ்லாமிய மன்ற தலைவர் டான் ஸ்ரீ அப்துல் அசிஸ் முஹமட் யூசோப் தெரிவித்தார்.
தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற பஹ்மி, அங்குள்ளவர்கள் அழைத்தால் உரையாற்றிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால், அச்சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என அப்துல் அசிஸ் குறிப்பிட்டார்.
முன்னதாக, பள்ளிவாசலில் பஹ்மி உரையாற்றியது தொடர்பில், புகார் கிடைத்திருப்பதாக JAIS உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.