Latestமலேசியா

பள்ளிவாசலில் முக்காடு அணியச் சொல்லப்பட்ட நீண்ட கூந்தலுடைய ஆண்; வைரலாகும் காணொளி

கோலாலம்பூர், ஏப்ரல் 7 – இஸ்லாமிய நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் குறிப்பாக பெண்கள் தங்களின் தலைமுடி, கைகள், கால்களை மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும் என்பது வழக்கமாகும்.

இதனிடையே, இளைஞன் ஒருவர் பள்ளிவாசலுக்குத் தொழுகை நிறைவேற்றும் போது முக்காடு அணியாததால் ஏற்பட்ட விவாதத்தைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் அந்த 36 வினாடி டிக் டோக் காணொளியில், அந்த ஆடவர் தோள் வரை நீண்ட கூந்தலுடன் தேசிய பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்ற சென்றுள்ளார்.

அப்போது சில வினாடிகளில், பள்ளிவாசலில் பணிபுரியும் பெண் ஒருவர், அந்த ஆடவர் முக்காடு அணியாததைச் சுட்டிக்காட்டி, அதனை அணியுமாறு கட்டளையிடுகிறார்.

மிகுந்த குழப்புத்துடன் அவ்வாடவர், ‘நான் ஒரு பையன். நான் tudung அணிய அவசியமில்லை’ என்று அந்த உதவியாளரிடம் தமது தரப்பு நியாயத்தை முன்வைக்கிறார்.

முதலில் முரண்பட்டாலும், பின் அதிர்ஷ்டவசமாக, அந்த உதவியாளர் அவரது கருத்தைப் புரிந்து கொண்டு, ‘aduhai’ என்று தனது தவறு குறித்துச் சொல்லிச் செல்வதை அந்த காணொளியில் கேட்க முடிந்தது.

தலைமுடியை மறைக்கச் சொன்ன விரக்தியில் பதிவிட்ட அக்காணொளி தற்போது நெட்டிசன்கள் மத்தியில் நகைச்சுவையான கருத்துகளைப் பெற்று வருகிறது.

அதிலும் ஒருவர், இரண்டாம் பாகம் எப்போது வரும் எனப் பதிவிட்ட கருத்து likes-களை அள்ளி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!