Latestமலேசியா

பள்ளிவாசல் கழிவறையில் 2 பெண்களுக்குக் கத்திக் குத்து; நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்த ஆடவர்

கிளானா ஜெயா, ஆகஸ்ட்-19 – சிலாங்கூர், கிளானா ஜெயாவில் பள்ளிவாசல் கழிவறையில் 2 பெண்களைக் கொலைச் செய்ய முயன்றதாக, 46 வயது ஆடவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் முறையே 26 மற்றும் 52 வயது 2 பெண்களை கொலைச் செய்யும் நோக்கில் அவர்களுக்கு காயம் விளைவித்ததாக அந்நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும், விளம்பர நிறுவனமொன்றின் பகுதி நேர ஊழியரான அந்நபர் இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.

இதையடுத்து, Mohammad Ferdaus Mashud எனும் அவ்வாடவரை, 15,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

மாதம் ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்குச் சென்று கையெழுத்திட வேண்டும், கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டன.

செப்டம்பர் 23-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புபு வருமென நீதிமன்றம் அறிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!