ஜோகூர் பாரு, பிப் 12 – பள்ளி தவணை மார்ச் மாதம் திட்டமிட்டபடி தொடங்கும். அதே வேளையில் 2021 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வும் ஏற்கனவே அறிவித்தபடி அடுத்த மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஷீ முகமட் ஜீடின் கூறினார். பள்ளி தவணை சுமுகமாகவும் SOP விதிமுறைகள் முழுமையாக பின்பற்றுவதையும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்று அதிகரித்தாலும் 4ஆவது மற்றும் 5ஆவது நிலையிலான அதன் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2020ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வை சுமுகமாக நடத்திய அனுபவம் நமக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் முழுமையான SOP யையும் நாம் கொண்டுள்ளோம் என முகமட் ரட்ஷீ கூறினார். கோவிட் தொற்று அதிகமாக இருந்தபோதிலும் நாட்டின் சுகாதார முறையில் அது நெருக்கடியை ஏற்படுத்தாது. எனவே எஸ்.பி.எம் தேர்வை தொடர்வதில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது என முகமட் ரட்ஷீ விவரித்தார்.