
கோலாலம்பூர், டிச 30 – நகரில் இலசவ பஸ்களை விடுவதைவிட பள்ளிப் பிள்ளைகளுக்காக இலவச பஸ் சேவைகள் அல்லது பள்ளி பஸ் நடத்துனருக்கு உதவித் தொகை வழங்கும்படி அரசாங்கத்தை பஸ் உரிமையாளர்களும் போக்குவரத்து செயற்பாட்டாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். ஜனவரி தொடங்கும் புதிய கல்வி ஆண்டில் பள்ளி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தக்கூடும் என தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த கோரிக்கைகள் எழுந்துள்ளது.
அரசாங்கம் தற்போது நகர்ப்புறங்களில் ஏற்பாடு செய்துள்ள இலவச பஸ் சேவை பெரும்பாலும் வெளிநாட்டினரும் சுற்றுப்பயணிகளும்தான் பயன்படுத்திவருகின்றனர் என மலேசிய பள்ளி பஸ் நடத்துனர்கள் சங்கத்தின் தலைவர் Amali Munif Rahmat கூறினார். அதோடு பள்ளி பஸ்சேவை கட்டணம் விதிமுறையாக்கப்படவில்லை. பள்ளி பஸ் நடத்துனர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுக்கள் அல்லது இணக்கத்தின்பேரிலேயே பள்ளி பஸ் கட்டணம் இருப்பதை Amali Munif சுட்டிக்காட்டினார்.