
கோலாலம்பூர், பிப் 2 – தீபகற்ப மலேசியாவில் பள்ளி வகுப்புகள் காலை 8 மணிக்கு தொடங்கலாம் என்ற ஆலோசனையை என்.யு.டி.பி எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் நிராகரித்தது. இந்த மாற்றத்தை செய்வதற்கு இன்னும் நேரம் வரவில்லையென அந்த சங்கத்தின் தலைவர் Aminuddin Awang தெரிவித்தார். காலை மற்றும் மாலை என இருவேளையில் வகுப்புகள் நடைபெறும் பள்ளியில் நேர மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். ஆசிரியர்களின் சமூக நலன் மற்றும் மதிய வேளை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும் என அவர் கூறினார். காலை வகுப்பு தாமதமாக தொடங்கினால் பிற்பகல் வகுப்பும் தாமதாக தொடங்க வேண்டியிருக்கும். அப்படியொரு சூழ்நிலை ஏற்படும்போது மாணவர்கள் தாமதமாக வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என Aminuddin Awang சுட்டிக்காட்டினார்.