மூவார், ஆகஸ்ட்-9, “என் மனைவியை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்கும் வாய்ப்பு எனக்கின்னும் கிடைக்கவில்லை!”
ஜோகூர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 46 வயது தோட்டக்காரர் நீதிபதியிடம் கூறிய வார்த்தைகள் அவை.
பத்து பஹாட், ஆயர் ஹீத்தாமில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் கைவிடப்பட்ட ஆசிரியர் குடியிருப்பின் கழிவறையில் வைத்து மாணவியை கற்பழித்தாக அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்நபருக்கு நீதிபதி பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தார்.
பள்ளியில், அதுவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பள்ளியில் வேலை செய்துக் கொண்டே மாணவியின் வாழ்க்கையைச் சீர்குலைக்க எப்படி மனம் வந்தது? பாதுகாவலராக இருக்க வேண்டியவரே வேலியை மேயலாமா? என தண்டனை வழங்கும் முன் நீதிபதி அந்நபரை கடிந்து கொண்டார்.
உங்களின் ஒரு சில நிமிட சுகத்துக்காக, அப்பிள்ளையின் வாழ்க்கையே பாழாகிறதே! வீட்டிலிருக்கும் மனைவி பிள்ளைகளை எண்ணிப் பார்க்க மாட்டீர்களா? என்றும் நீதிபதி கேட்டார்.
ஜூலை 24-காம் தேதி பிற்பகல் 3.30 மணி வாக்கில் தனது காதலனைப் பார்ப்பதற்காக அந்த ஆசிரியர் குடியிருப்பு பக்கமாக போன போது, மூன்றாம் படிவ அப்பெண்ணைத் தடுத்து அத்தோட்டக்காரர் கற்பழித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.