
கோலாலம்பூர், மார்ச் 10 – பள்ளி விடுமுறை காலக்கட்டமான தற்போது போர்ட் டிக்சனில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அந்த நகரில் கடற்கரையை ஒட்டிய பெரும்பாலான ஓட்டல்கள் போதுமான சுற்றுப்பயணிகளின்றி மந்தமாகவே உள்ளன. மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் நெகிரி செம்பிலான் கிளையின் தலைவர் Haziz Hassan இதனை ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்க்கை செலவினம் அதிகரித்தது சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்ததற்கு காரணமாக இருக்கும் என அவர் கூறினார். விடுமுறை காலத்தில் மக்கள் மிகவும் நிதானமாக செலவழிப்பதற்கு அடையாளமாக சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக Haziz Hassan தெரிவித்தார்.