கோலாலம்பூர், செப்டம்பர் 5 – மலாயா தொடருந்து நிறுவனமான KTMB, இரண்டாம் தவணைக்கான பள்ளி விடுமுறை, மலேசியா தினம் மற்றும் மவ்லிதுர் ரசூல் முன்னிட்டு, கோலாலம்பூர் சென்ட்ரலிலிருந்து பாடாங் பெசார் (Padang Besar) வரை கூடுதல் இரண்டு மின்சார ரயில் சேவையான ETS பயணங்களை வழங்குகிறது.
செப்டம்பர் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை தினமும் 630 டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று KTMB தெரிவித்திருக்கிறது.
இந்த கூடுதல் ETS ரயில் சேவை பாடாங் பெசாரிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு KL சென்ட்ரலை சென்றடையும்.
அதேவேளையில், KL சென்ட்ரலிருந்து மாலை 5.00 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு படாங் பெசாரைச் சென்றடையும்.
இந்நிலையில், டிக்கெட்டுகள், KTMB mobile செயலி மூலமாகவோ, அதிகாரப்பூர்வ KTMB இணையத்தளம் வாயிலாகவோ, வாங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.