
பேராக், கோப்பிங்கிலிருந்து தாப்பா செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், பழங்களை ஏற்றி இருந்த லோரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஏழு கிலோமீட்டர் தூரத்த்திற்கு நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை மணி 2.45 வாக்கில், புக்கிட் காயூ இத்தாமிலிருந்து பழங்களை ஏற்றிக் கொண்டு செலாயாங் சந்தையை நோக்கி பயணமான அந்த லோரியை, 16 பயணிகளுடன் கெடா, பாலிங்கிலிருந்து தலைநகர் நோக்கி பயணமான விரைவு பேருந்து ஒன்று பின்புறம் இருந்து மோதியது. அதனால் லோரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததோடு, அதில் இருந்த பழங்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால் போக்குவரத்து தடைப்பட்டது. அவ்விபத்தில், காயமடைந்த விரைவு பேருந்து ஓட்டுனரும், 26 வயது பெண் பயணி ஒருவரும் தாப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் வான் அஸ்சாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.