Latestஇந்தியா

பழனி கோவிலில் தைப்பூச வழிபாட்டுக்கு தடை

சென்னை, ஜன 13 – கோவிட் தொற்று காரணமாக பழனி கோவிலில் தைப்பூச வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . நாளை ஜனவரி 14ஆம்தேதி முதல் 18ஆம் தேதிவரை கோவில்கள் அடைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப பழனி கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தைப்பூச விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் பழனி கோவில் வலைத்தளம் மற்றும் யூ டியுப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு முதல் முறையாக பழனியில் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. நாளை முதல் வருகிற 18ஆம் தேதிவரை தைப்பூச நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!