
ஷா அலாம், ஜன 10 – நாட்டின் பாதுகாப்பு வசதிகள் குறிப்பாக அரச மலேசிய கடற்படையின் கப்பல்கள் மிகவும் பழமையாகிவிட்டதால் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக சிலாங்கூர் சுல்தான் Sharafuddin வலியுறுத்தியுளளார். கடற்படையின் கேப்டனுமான சுல்தான் அரச மலேசிய கடற்படையின் தளபதி Reza Sany யை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். நாட்டின் கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடற்படை எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென சிலாங்கூர் அரச அலுவக முகநூலில் சுல்தான் Sharafuddin பதிவிட்டுள்ளார். பதவி ஓய்வு பெறவிருக்கும் Reza Sany , இன்று Shah Alam , Istana Bukit kayangan – னில் சுல்தானை சந்தித்தார்.