Latestசினிமா

பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார் ; அடுத்தடுத்த இழப்புகளால் சோகத்தில் மகேஷ் பாபு குடும்பத்தினர்

ஹைதரபாத், நவ 15 – தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார்.

மாரடைப்பின் காரணமாக நேற்று ஹைதராபாத்தில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது . அவருக்கு வயது 80. நடிகர் கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர். இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர். மேலும் பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அரசியலிலும் பங்காற்றிய இவர், 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி யாகவும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்திருந்தார்.

இதனிடையே, இந்த வருடம் , தனது அண்ணன், தாய் இருவரையும் இழந்த மகேஷ் பாபு, தற்போது தனது தந்தை கிருஷ்ணாவின் மரணத்தால் பெரும் துயரத்தில் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!