Latestசினிமா

பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

சென்னை, அக் 12 – பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். 83 வயதான அவர் உடல் நலக் குறைவினால் இன்று காலமானார். இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீகாந்த் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குணச்சித்திரம் மற்றும் வில்லன் பாகங்களிலும் அவர் நடித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய நடிகர்களின் படங்களிலும் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். சினிமாவிற்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களிலும் அவர் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்டுள்ள திரைப்படங்களில் நடித்துள்ள அவரது மறைவுக்கு திரையுல பிரமுகர்கள் தங்ளது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!