Latestஉலகம்

பழம் பெரும் நடிகை ஜமுனா காலமானார்

ஐதரபாத், ஜன 27 – தமிழ், தெலுங்கு, கன்னடம், உட்பட பல்வேறு தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகை ஜமுனா காலமானார். 86 வயதான அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ஜெமினி கணேசன் , சாவித்திரியுடன் அவர் நடித்த மிஸ்ஸியம்மா படம்தான் அவரை திரையுலகில் பெரிய நட்சத்திராக ஆக்கியது. தங்கமலை ரகசியம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜமுனா நடித்ததோடு அந்த படத்தில் அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ என்ற பாடலும் குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜெய்சங்கருடன் அன்புள்ள மான்விழியே பாடல் காட்சியும் ஜமுனாவுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தன.

தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு அம்மாவாகவும் அவர் நடித்திருந்தார். தமிழில் 27 படங்கள் உட்பட மொத்தம் 198 படங்களில் அவர் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு தேர்தலில் ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு ஜமுனா தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1990 ஆம் ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருது, தமிழக அரசின் எம்.ஜி .ஆர் விருது ,பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!