
சிப்பாங், ஜன 25- சிலாங்கூர் , டிங்கிலில் கட்டுமானப் பகுதியிலுள்ள பழைய ஈயக் குட்டையில் ஆடவர் ஒருவரின் உடல் மிதந்துகொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அங்கு சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு தகவல் கொடுத்ததாக Sepang OCPD துணை கமிஷனர் Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார். அந்த சடலத்தின் உடலில் BCG தடுப்பூசி அடையாளம் எதுவும் காணப்படவில்ல என்பதால் அது வெளிநாட்டவராக இருக்கலாம் என அவர் கூறினார். அந்த சடலம் உடல் உப்பிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கு முன் அந்நபர் இறந்திருக்கலாம் என Wan Kamarul தெரிவித்தார்.