
கோலாலம்பூர், ஏப் 7 – பழைய உலோகப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில் 37 வயதுடய நபர் மரணம் அடைந்த வேளையில் காயம் அடைந்த மற்றொரு நபர் Sarikei மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை ஆறு மணிக்குப்பிறகு நிகழ்ந்த அந்த சம்பவத்தை தொடர்ந்து 38 மற்றும் 65 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அந்த இருவரும் Meradong போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்ய வந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.