கோலாலம்பூர், ஆகஸ்ட் -25, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் லாரியிலிருந்து கழன்றி வந்த டயர் மோதி மோட்டார் சைக்கிளோட்டி காயமடைந்துள்ளார்.
கோலாலம்பூரிலிருந்து பழைய கிள்ளான் சாலையை நோக்கிச் செல்லும் Jalan Syed Putra-வில் வெள்ளிக்கிழமை காலை 11.46 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
லாரியிலிருந்து திடீரென கழன்றி உருண்டோடிய டயர், பின்னால் வந்த காரையும் மோட்டார் சைக்கிளையும் மோதியிருக்கிறது.
அதில் 55 வயது மோட்டார் சைக்கிளோட்டி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காரோட்டிக்கு காயமேதுமில்லை.
1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக, கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் கூறியது.
லாரியின் டயர் உருண்டோடி வந்து மோட்டார் சைக்கிளையும் காரையும் மோதும் வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.