
கோலாக்கிராய், ஆக 22 – ஜாலான் கோத்தா பாரு- குவா மூசாங் சாலையின் 60 ஆவது கிலோமீட்டரில் ஒரு லோரி பஸ்ஸில் மோதிய விபத்தில் அந்த லோரி ஓட்டுனர் மாண்டார். கோத்தாபாருவிலிருந்து 22 பயணிகளுடன் சிரம்பானை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மீது குவா மூசாங்கிலிருந்து கோத்தா பாருவை நோக்கி சென்று கொண்டிருந்த லோரி மோதியது . சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த அந்த பாஸ் சாலையின் தடுப்பில் மோதியது. எனினும் அந்த பஸ்ஸில் இருந்த 22 பயணிகள் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே லோரி ஓட்டுனர் இறந்தார். இந்த விபத்தில் லோரியின் உதவியாளர் மற்றுநும் பஸ் ஓட்டுனரும் சொற்ப நிலையில் காயம் அடைந்தனர் என கோலாக்கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுசாய்மி முகமட் தெரிவித்தார்.