சிரம்பான், பிப் 8 – சுற்றுலா பஸ் ஒன்று ஒரு மரத்தில் மோதிய பின் கவிழ்ந்ததைத் தொடர்ந்து USIM எனப்படும் மலேசிய அறிவியல் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவிகள் கயம் அடைந்தனர். பண்டார் பாரு நீலாயில் இன்று விடியற்காலை மணி 7.40 அளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக பண்டார் பாரு நீலாய் , தீயணைப்பு படையின் அதிகாரி Raihan Che mat தெரிவித்தார்,
அந்த நான்கு மாணவிகளும் கை மற்றும் முதுகெலும்பில் காயம் அடைந்தனர் என அவர் தெரிவித்தார். 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் USIM சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் விபத்துக்குள்ளானது. பண்டார் பாரு நீலாயில் McDOnalads முன்புறம் உள்ள சாலையில் எண்ணெய்க் கசிவினால் அந்த பஸ் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. காயம் அடைந்த மாணவிகள் துவாங்கு ja’afar மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லலப்பட்டனர்.