
ஈப்போ. ஜூன் 1 – தைப்பிங், Taman Kota wira பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அட்டை பெட்டிக்குள் புதிதாக பிறந்த ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பெண் ஒருவர் தமது காரை பஸ் நிலையத்திற்கு அருகே நிறுத்தி பூத்திலிருந்து ஒரு பொருளை எடுக்க முயன்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பெட்டிக்குள் துண்டினால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை வைக்கப்பட்டிருந்ததோடு அதன் அருகே எறும்புகளும் காணப்பட்டதாக தைப்பிங் போலீஸ் தலைவர் Razlan Abdul Hamid தெரிவித்தார். 2.6 கிலோ எடை கொண்ட அந்த குழந்தை தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு சுவாச்சிக்கும் பிரச்னையை எதிர்நோக்கியதால் செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த குழந்தையின் நிலை சீராக இருப்பதோடு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருவதாக Razlan தெரிவித்தார்.