
கிள்ளான், மார்ச் 7 – கிள்ளான் Jalan Abdul Manan னில் சாலையில் துப்புரவு பணியாளர் ஊழியர் ஒருவர் பஸ் மோதியதில் மரணம் அடைந்தார். இன்று விடியற்காலை 6.30 மணியளவில் அந்த வங்காளதேச தொழிலாளர் சைக்கிளில் சாலையை கடந்தபோது ஜாலான் மேருவிலிருந்து வந்த பஸ் அவரை மோதியது. காயம் அடைந்த அந்த ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் எஸ் .விஜயராவ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.