
குவந்தான், பிப் 24 – பகாங்கில் உள்ள Kampung Sungai Miang கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கிய மடிந்த திமிங்கலத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை மீன்வளத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த திமிங்கலத்தின் உடல் அழுகிவிட்டதால், அதன் சரியான இனத்தை உறுதிசெய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த திமிங்கலத்தின் இனத்தை கண்டறிய eDNA மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
திமிங்கலத்தின் உடலின் அடிப்படையில் அது ஒரு பிரைட்டி (Bryde) திமிங்கலம் அல்லது ஒரு துடுப்பு திமிங்கலம் என்று அது இன்று மீன்வளத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.