குவாந்தான், ஆகஸ்ட்-27 – பஹாங், குவாந்தானில் உள்ள ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான 3 ஏக்கர் நிலத்தை 30 வருட குத்தகைக்கு நீட்டிக்க மத்திய நில ஆணையர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
நிலப் பிரச்சினை குறித்து விவாதிக்க, மத்திய நில ஆணையர் டத்தோ முஹம்மது அசிம் (Datuk Muhammad Azim) தலைமையில் இயற்கை வள அமைச்சில் இன்று நடைபெற்ற இறுதி தொழில்முறைக் கூட்டத்தின் போது அதற்கு இணக்கம் காணப்பட்டது.
அப்பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததும், 3 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக் காலம் குறித்த அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு ஜெராம் (குவாந்தான்) தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒப்படைக்கப்படும்.
அக்கூட்டத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி சார்பில், அதன் வாரியத் தலைவர் டத்தோ நடேசன், தியாகராஜ் சங்கரநாராயணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்க் கல்வி இயக்கங்களின் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மு. வெற்றிவேலன் ஓர் அறிக்கையின் வாயிலாக அவ்விவரங்களைத் தெரிவித்தார்.