Latestமலேசியா

பாகான் ஆஜாம் லோட்டஸ் பேரங்காடிக்கு வெளியே முன்னாள் காதலியை கொல்லப் போவதாக கத்தி முனையில் மிரட்டிய ஆடவன் கைது

பட்டர்வெர்த், ஆக 8 – Bagam Ajam-மில் லோட்டஸ் (Lotus) பேரங்காடிக்கு வெளியே தனது முன்னாள் காதலியை கத்தி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு கொல்லப்போவதாக மிரட்டிய ஆடவன் கைது செய்யப்பட்டதாக வட செபராங் பிறை (Seberang Prai) போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் ( Anuar Abdul Rahman ) தெரிவித்தார். அந்த பேராங்காடிக்கு பொருட்களை வாங்க வந்தவர்கள் அந்த நபரை பிடித்ததை தொடர்ந்து அங்கு சென்ற பட்டர்வெர்த் (Butterworth) போலீஸ் நிலைய அதிகாரிகள் அந்த நபரை தடுத்து வைப்பதற்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். சம்பவத்தில் அந்த ஆடனிடமிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதற்கு நடத்திய போராட்டத்தின்போது வலது கையின் விரலில் அந்த பெண் காயம் அடைந்தார்.

அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக விரைவில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும். மிரட்டல் மற்றும் அபாயகரமான ஆயுதத்தின் மூலம் காயம் விளைவித்தது தொடர்பாக குற்றவியல் சட்டத்தன் 324 மற்றும் 506 விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அனுவார் தெரிவித்தார். பொதுமக்கள் முன்னிலையில் தனது முன்னாள் காதலியின் கழுத்தை பிடித்துக்கொண்டு கையில் கத்தியுடன் மிரட்டும் அந்த ஆடவனின் காணொளி x தளத்தில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!