கோலாலம்பூர், மே 4 – பேரா, பாகான் செராய் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்யும் இடத்திலேயே அதன் வியாபாரி ஒருவர் சிறுநீர் கழிக்கும் அறுவருப்பான காட்சி வாடிக்கையாளரை முகம் சுளிக்கச் செய்திருப்பப்பதோடு இந்த காட்சி அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளர்களை கவனித்துவரும் அதே வேளையில் அந்த மீன் வியாபாரி தனது கடையின் முகப்பிடத்திற்கு பின்னால் நின்றவாறு சிறுநீர் கழிக்கும் அந்த காட்சி டுவிட்டரில் பதிவாகியுள்ளது. அந்த வியாபாரி முதல் முறையாக இப்படி நடந்துகொள்ளவில்லை. இரண்டு முறை அவ்வாறு சிறுநீர் கழிப்பதை அந்த காணொளியில் காணமுடிகிறது. சுகாதாரமற்ற வகையில் மீன் விற்கும் இடத்திலேயே வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் பொது சுகாதார மற்றும் பாதுகாப்பு தரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அந்த வியாபாரி கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆரோக்கியமற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
இது குறித்து நடவடிக்கை பிரிவினர் வினவியபோது வேறு பணியாளர்கள் எவரும் கடையில் இல்லை என்பதால் வியாபாரம் செய்யும் இடத்திலேயே சிறுநீர் கழித்த தனது நடவடிக்கையை அந்த மீன் வியாபாரி நியாயப்படுத்தினார். இச்சம்பவம் குறித்து நடவடிக்கை பிரிவினர் ஏமாற்றம் தெரிவித்ததோடு அந்த மீன் வியாபாரி மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு மீண்டும் இப்படியொரு சம்பவத்தில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்தாக தெரிவித்தனர்.