பாகான் டத்தோ, ஆகஸ்ட்-7, பேராக் பாகான் டத்தோவில் பேரப்பிள்ளை வயதிலுள்ள 10 வயது சிறுமியை மானபங்கம் செய்த சந்தேகத்தில் 71 வயது முதியவர் கைதாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னாள் பராமரிப்பாளரின் கணவருமான அந்நபர், நேற்று மாலை சுங்கை சூமுன் (Sungai Sumun) அருகேயுள்ள கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் கைதானார்.
அச்சிறுமியின் 39 வயது தாய் போலீசில் புகார் செய்த மாத்திரத்தில் அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் ஆரிஸ் (Datuk Azizi Mat Aris) தெரிவித்தார்.
2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.