
பாகிஸ்தான், செப் 30 – பாகிஸ்தானில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் பிறந்த தினத்தைக் கொண்டாடவிருந்த நிலையில் மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் 58 பேர் பரிதாபமாக பலியானதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
முதலாவது தாக்குதல் பாலோசிஸ்தான் பிரதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்டது.
அந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் மசூதியைத் தரைமட்டமாக்கியதோடு 54 பேரின் உயிரைப் பலிகொண்டது.
இறந்தவர்களின் கை, கால்கள் என உடல் பாகங்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்த காட்சி பலரையும் உருகுலையச் செய்தது.
அடுத்த சில மணி நேரங்களில் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.
அதில் போலிஸ் அதிகாரியும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அது தற்கொலை படை தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்
காயமுற்றவர்களில் குறைந்தது 20 பேரின் நிலை மோசமாக உள்ளதாக போலிசார் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் அடிக்கடி இது போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானாலும் நேற்றைய இந்த தாக்குதல்களுக்கு இது வரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.