
கியுட்டா, டிச 2 – பாகிஸ்தானில் கியுட்டாவில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதோடு 28 பேர் காயம் அடைந்தனர். ரோந்து போலீஸ்காரர்களுக்கு எதிராக அந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு அந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என்றும் அந்த தீவிரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இவ்வாரம் அரசாங்கத்துடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடரந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.