
இஸ்லாமபாத், ஜன 30 – பாகிஸ்தானில் பெஷாவாரில் பள்ளிவாசலுக்குள் குண்டு ஒன்று வெடித்ததில் 25பேர் மரணம் அடைந்தனர். அச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளான். இந்த குண்டு வெடிப்பு வலுவாக இருந்ததால் அந்த பள்ளிவாசலின் கூரை இடிந்ததால் அதில் பலர் சிக்கிக்கொண்டதாகவும் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.