
இஸ்லாமபாத்தி, ஆக 24 – பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கணக்கான கிராமங்களும் விவசாய நிலங்ளும் வெள்ளத்தில் மூழகியுள்ளன. Sutlej ஆற்றின் கரை உடைந்ததால் பஞ்சாப் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ளன. வெள்ளத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளின் கூரைகளில் ஏறி உயிர் தப்பினர். வெள்ளத்தில் மூழ்கிய கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்பப்படும் மீட்பு படகுகள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. பலர் முக்கியமான பொருட்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு தங்களது கால்நடைகளுடன் நடந்தே வெளியேறினர்.