Latestமலேசியா

பாகிஸ்தான் அளித்த ‘உற்சாக’ வரவேற்பால் கடும் சினம்; இந்தியாவில் சாக்கிர் நாயக்கின் X கணக்கு முடக்கம்

புது டெல்லி, அக்டோபர்-5 -இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான சர்ச்சைக்குரிய மதபோதகர் சாக்கிர் நாயக்கின் (Zakir Naik) X தளக் கணக்கை, இந்திய அரசாங்கம் அதிரடியாக முடக்கியுள்ளது.

தமிழகத்தின் பாலிமர் செய்தி நிறுவனம் (Polimer News) அச்செய்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் சென்ற சாக்கிர் நாயக்கிற்கு அங்கு தடபுடலாக வரவேற்பளிக்கப்பட்டதற்கு பதிலடியாக, இந்தியாவின் அந்நடவடிக்கை அமைந்துள்ளது.

தனது பேச்சுகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் சாக்கிர், சொற்பொழிவாற்றுவதற்காக ஒரு மாத கால பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அதன் போது பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் தனது ‛X’ வலைதளத்தில் வெளியிட்டார்.

இதனால் சினமடைந்த இந்தியா, நாங்கள் தேடும் குற்றவாளிக்கு நீங்கள் சிவப்புக் கம்பளம் விரிப்பீர்களா என பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தது.

பணமோசடி, வெறுப்புப் பிரசாரம், பயங்கரவாதத்தைத் தூண்டியது போன்ற குற்றங்களுக்காக சாக்கிர் மீது இந்தியாவில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து 2016-ல் இந்தியாவிலிருந்து வெளியேறி அது முதல் அவர் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!