Latestஉலகம்

பாகிஸ்தான் சமூக ஊடக பிரபலத்தின் ஆணவக் கொலை ; சகோதரர் விடுவிப்பு

இஸ்லாமாபாத், பிப் 16 – பாகிஸ்தானின் Kim Kardhashian-னாக அறியப்பட்ட சமூக ஊடக பிரபலமான Qandeel Baloch-சை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட அவரது சகோதரர் தற்போது அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பழமைவாய்ந்த போக்கினை கொண்ட முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில், மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்த முயன்ற Qandeel Baloch, குடும்பத்திற்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதாகக் கூறி , அவரை அவரது சகோதரர் Waseem Azeem ஆணவக் கொலை செய்தார். அந்த குற்றத்திற்காக, 2019 -இல் Waseem-மிற்கு ஆயுட் கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது பெற்றோர் மகனின் குற்றத்தை மன்னித்து விட்டதாகவும், போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தாலும் , அந்நபரை விடுவித்திருப்பதாக, Waseem-மின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!