பாகிஸ்தான், ஆகஸ்ட் 22 – நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் எலிகளை ஒடுக்க வேட்டையாடும் பூனைகளை வாங்கி வளர்க்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த எலிகள் சட்டமன்றத் துறைகளில் உள்ள பல முக்கியமான மற்றும் ரகசிய கோப்புகளை அழித்துள்ளன; கம்ப்யூட்டரின் வயர்களை கடித்து சேதப்படுத்துகின்றன.
இதற்காக பாகிஸ்தான் தலைநகர் மேம்பாட்டு ஆணையம் (CDA) 1.2 கோடி பாகிஸ்தான் ரூபாய் அதாவது 18857 ரிங்கிட் 38 சென்னை ஒதுக்கியுள்ளது.
இந்த எலிகளை அகற்ற தனியார் நிபுணர்களின் உதவியைப் பெற CDA திட்டமிட்டுள்ளது.
இது தவிர, எலிகளைப் பிடிக்க சிறப்பு பொறிகளும் நிறுவப்படவுள்ளது.
பாகிஸ்தான் செய்தித்தாள்களிலும் இதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எலிகளை சமாளிக்க அதிகாரிகளுக்கு உதவக்கூடிய பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.