
சென்னை , பிப் 12 – நில அபகரிப்பு தொடர்பாக பாகுபலி புகழ் நடிகர் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஸ் பாபுவுக்கு எதிராக ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது நிலத்தை நடிகர் ராணாவும் திரைப்பட தயாரிப்பாளரான சுரேஸ் பாபுவும் அபகரிப்பு செய்திருப்பதாக ஐதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரமோத் குமார் என்பவர் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ராணா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.