கோலாலம்பூர். மார்ச் 2 – நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக தாம் நியமிக்கப்படுவதற்கு பரிந்துரை செய்த அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்கு நாட்டின் முதலாவது பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினரான ரம்லி முகமட் நோர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் எந்தவொரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலும் நேர்மையுடனும், பாகுபாடு இன்றியும், பொறுப்புணர்வோடும் பணியாற்றுவதற்கு அவர் உறுதிபூண்டுள்ளார்.
ஓய்வு பெற்ற மூத்த போலீஸ்காரரான ரம்லி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . நேற்று மாலை அவர் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் முறையாக தலைமையேற்றார்.