Latestமலேசியா

பாகோவில் மூவர் படுகொலை; வீட்டிற்கு தீயூட்டிய ஆடவனுக்கு 3 நாள் காவல் நீட்டிப்பு

மூவார். பிப் 14 – பாகோவில் மூவர் படுகொலைக்கு காரணமாக அவர்களது வீட்டிற்கு  தீ வைத்த குற்றத்திற்காக  முக்கிய சந்தேகப் பேர்வழி மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.  தண்டனைச்  சட்டத்தின்  302,  436, மற்றும்  326 ஆவது பிரிவின் கீழ்  விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அந்த  48 வயது ஆடவனை தடுத்து வைக்கும்  உத்தரவை   மாஜிஸ்திரேட்  பாத்தின் டாலியா காலிட் ( Fatin  Dalilah Khalid )  பிறப்பித்தார்.  கொலையுண்ட  இருவரின் மூத்த மகனான  அந்த சந்தேகப் பேர்வழி போலீஸ் அதிகாரிகளுடன் கடுமையான பாதுகாப்புடன்  இன்று காலை மணி  9.13 அளவில் மூவார் நீதிமன்றம் வளாகம் கொண்டு வரப்பட்டான். 

அந்த சந்தேகப் பேர்வழி இன்று அதிகாலை  1 மணியளவில்  கோலாலம்பூர் ,புக்கிட் பிந்தாங்கில்  துணிப்பையுடன் தனியாக திரிந்துக்கொண்டிருந்தபோது  கைது செய்யப்பட்டான். வேவு தகவல்கள் திரட்டப்பட்டதை தொடர்ந்து ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின்  ஒத்துழைப்போடு  மூவார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை கைது செய்தனர்.  

கடந்த வெள்ளிக்கிழமை கொலை மற்றும்  வீட்டிற்கு தீவைத்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தனது மோட்டார்சைக்கிளை  மூவார் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு, பஸ் மூலம்  கோலாலம்பூருக்கு புறப்பட்டதாக தெரிகிறது.  அந்த நபர்  TBS  பஸ் முனையத்தில் பஸ்ஸிலிருந்து  இறங்கும்  சிசிடிவி காணொளியை  போலீஸ கண்டதைத் தொடர்ந்து அவன் கோலாலம்பூரில் கைது செய்ப்பட்டான்.   Pagoh,  Kampugn  Paya Redan  னிலுள்ள ஒரு வீட்டில்  தீ ஏற்பட்டதை தொடர்ந்து  அக்குடும்பத்தை சேர்ந்த மூன்று  உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!