Latestமலேசியா

பாசிர் கூடாங்கில் 26 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின

பாசிர் கூடாங், செப்டம்பர் 9 – மலேசியா Marine and Heavy Engineering Holdings நிறுவனத்தில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி நாசமாகின.

இந்த சம்பவம் அந்த நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் நடந்ததாக தீயணைப்பு நிலையத்தின் துணைத் தலைவர் சர்ஹான் அக்மல் (Sarhan Akmal) தெரிவித்தார்.

தீப்பற்றிய நிறுவனத்தின் அவசரகால பணி குழு, உடனடியாக 200 அடி நீர் குழாய்கள் மற்றும் 13 தீயை அணைக்கும் உலர் தூளை பயன்படுத்தி தீயை அணைத்ததாக அவர் கூறினார்.

தீ விபத்து நடந்த இடத்தை உன்னிப்பாக கவனித்து ஆய்வு செய்து வரும் நிலையில், தீக்காண காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!