
ஜொகூர் பாரு, ஆகஸ்ட்டு 24 – பாசிர் கூடாங், ஜாலான் பெகெலிலிங்கிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில், இரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது, நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை மணி 5.21 வாக்கில் அச்சம்பவம் குறித்து, பாசிர் கூடாங் தீயணைப்பு மீட்புப் படைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாக, அதன் நடவடிக்கை பிரிவு கொமண்டோ சர்ஹான் அக்மால் முஹமட் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படையினர், HAZMAT எனப்படும் லர்க்கின் BBP-யின் அபாயகரமான பொருட்கள் பிரிவின் உதவியுடன், தொழிற்சாலையிலுள்ள, இரசாயனக் குழாயில் ஏற்பட்ட கசிவை கண்டறிந்து சரிசெய்தனர்.
அச்சம்பவம் தொடர்ப்பில், பொதுமக்களிடமிருந்து புகார் எதுவும் பெறப்படவில்லை என்பதையும் அக்மால் உறுதிப்படுத்தினார்.