பாசீர் கூடாங், ஏப்ரல் 26 -ஜொகூர் பாசீர் கூடாங்கில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்ற உள்ளூர் ஆடவன் கையும் களவுமாகப் பிடிபட்டான்.
புதன்கிழமை இரவு கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து 20 வயது அவ்விளைஞன், தான் திருட போன வீட்டில் வைத்தே கைதானதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் Superitendan Mohd Sohaimi தெரிவித்தார்.
கைது நடவடிக்கையின் போது முரண்டுப் பிடித்த அவ்வாடவன் தப்பித்தோட முயன்று தோல்வி கண்டான்.
அவனிடம் இருந்து இறைச்சி வெட்டும் கத்தியும் சாக்லெட் நிற பிளாஸ்டிக் நாற்காலியும் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை ஆயுதமாகக் கொண்டு தான் அவன் கைவரிசை காட்டி வருவது தெரிய வந்துள்ளது.
அவனை ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைத்து விசாரிக்கவும் நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டிருப்பதாக Mohd Sohaimi சொன்னார்.
சந்தேக நபர் ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியவன் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்நபர் கைதாகும் காணொலி முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.