Latestமலேசியா

பாசீர் பூத்தே ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

பாசீர் பூத்தே, பிப்ரவரி-28 – இன்று காலை, கிளந்தான் பாசீர் பூத்தே, சுங்கை தோக் பாலி அருகே உள்ள ஏரியில் குளித்தபோது, சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

12 வயது Wan Mohd Fahmi Wan Mohd Fadhli, சம்பவத்தின் போது மற்ற இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் அந்த ஏரியில் குளித்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்கள் அங்கு உண்மையில் மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர்; பிறகு ஒன்றாக குளித்த போது அச்சிறுவன் நீரில் மூழ்கியதாக, தோக் பாலி தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.

இந்நிலையில், தீயணைப்பு மீட்பு படகு மற்றும் ஒரு ஸ்கூபா பிரிவின் உதவியுடன் தேடல் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக, 3 மீட்டர் ஆழமுள்ள ஏரியில் நண்பகல் 12.22 மணிக்கு குப்புற விழுந்தபடி அச்சிறுவன் பேச்சு மூச்சின்றி மீட்கப்பட்டான்.

அங்கிருந்த மருத்துவக் குழு, அவன் உயிரிழந்ததை உறுதிச் செய்தது.

இதையடுத்து சவப்பரிசோதனைக்காக, பாசீர் பூத்தே தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு சடலம் கொண்டுச் செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!