
பெண் ஒருவர் பின்னால் அமர்ந்திருக்க, ராயா உடையில் மோட்டார் சைக்கிளில் அபாயகர சாகசத்தில் ஈடுபட்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது.
அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளதாக, புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ மாட் காலம் காரிம் தெரிவித்தார்.
கிளந்தான்,கோத்தா பாரு, கம்போங் பெரிங்ஹாட் பகுதியில் நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில போக்குவரத்து அமலாக்க புலனாய்வுத் துறைக்கு புக்கிட் அமான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக, ராயா உடையில் ஆடவன் ஒருவன் பெண் பின்னால் அமர்ந்திருக்க, மோட்டார் சைக்கிளில் ‘Whelie’ அபாயகர சாகசத்தில் ஈடுபடும், 29 வினாடி காணொளி வைரலானது குறிப்பிடத்தக்கது.