கூலிம், மே 10 – Padang Serai, Kampung Ekor Kuchingகில் செயல்பட்டு வந்த மசகு எண்ணெய் தொழிற்சாலை இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 விழுக்காடு அழிந்தது. காலை மணி 11.09 அளவில் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக கூலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் Azmir Hassan தெரிவித்தார். அந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவோ அல்லது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த தீவிபத்திற்கான காரணம் மற்றும் இழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.