
அலோர் ஸ்டார், நவ 28 –டிசம்பர் 7-ஆம் தேதி நடத்தப்படும் பாடாங் செராய் தேர்தலன்று சிறப்பு விடுமுறை வழங்கப்படாது .
ஏனெனில் அத்தேர்தல் கெடா மாநிலத்தில் ஒரு தொகுதியை மட்டுமே உட்படுத்தியிருப்பதாக, அம்மாநில மெந்திரி பெசார் முஹமட் சனூசி நோர் தெரிவித்தார்.
பாடாங் செராய் தொகுதியில் தேர்தல் , புதன்கிழமையன்று வேலை நாளன்று நடைபெறுவதால், மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அன்றைய தினம் சிறப்பு விடுமுறையை வழங்கும்படி, பெர்சாத்து கட்சியின் தொடர்பு பிரிவின் தலைவர் வான் சைஃபூல் வான் ஜான் கேட்டுக் கொண்டிருந்தார்.